Header Ads



யாழ் முஸ்லிம் வலைத்தளம் பற்றிய ஒரு குறிப்பு

யாழ் முஸ்லிம் வலைத்தளம் குறித்து பல்வேறு மட்டங்களில் ஆரோக்கியமானதொரு பார்வை நிலவுவதை நாம் அறிவோம். பலர் தமது கருத்துக்களையும் எழுதி அனுப்புவார்கள். சிலர் விமர்சனங்களையும் முன்வைப்பார்கள். சிலவேளைகளில் சிலருடைய ஆக்கங்களை நாம் பதிவேற்றம் செய்யும்போது, அந்த ஆக்கத்தில் சொல்லப்பட்ட கருத்துநிலையில்தான் யாழ் முஸ்லிம் பயணிக்கிறது என்று அபிப்பிராயம் கொள்வோரும் உள்ளனர்.

அந்தவகையில் அண்மையில் நாம் அஸீஸ் நிஸாருத்தீன் என்பவருடைய கட்டுரையொன்றை பதிவிட்டோம். அக்கட்டுரை சில சர்ச்சைகளை எற்படுத்தியது. சிலர் அதுபற்றி எம்முடன் தொடர்புகொண்டு விளக்கம் கோரினர். நாமும் அவர்களுக்கு விளக்கினோம். அவ்வாறு எமது விளக்கத்தையடுத்து எம்மை வந்தடைந்த ஈமெயில் கடிதமொன்றை இங்கு பதிவிடுகிறோம்.

ஹாலிக் அல் அர்ஷத் (நளீமி)

உங்களுடைய வலைத்தளத்தை நீங்கள் சிறப்பாகச் செய்யும் போது சில ஆக்கங்களினால் உங்களுடைய வலைத்தளத்தின் நற்பெயருக்கு கெட்ட பெயர் ஏற்படுகின்றது. தனிப்பட்ட ரீதியில் எனக்கு அஸீஸ் நிஸார்தீன் பற்றி எதுவும் தெரியாது. நான் நேரடியாக இதுவரை அவரை சந்தித்ததும் இல்லை. அண்மையில் அவருடைய ஆக்கங்களை வாசிக்கும் போதுதான் அவர் பற்றிய சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. ஒரு முன்னணி இஸ்லாமிய அறிஞ்சரை அமெரிக்காவின் நண்பன் என்று விமர்சித்து எழுதும் அளவுக்கு அவரின் எழுத்துக்கள் உள்ளது. 

அஸீஸ் நிசாருதீன் ஒருவிடயத்தை எழுதவும், பதிவிடவும் உரிமை பெற்றுள்ளார். அவருக்குள்ள உரிமையை மதிக்கிறேன். என்ற யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் கருத்தை  நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

உண்மையில் நீங்கள் தவறுதலாகத்தான் இந்த ஆக்கத்தை பிரசுரித்திருப்பீர்கள் என்றே நான் எண்ணினேன்.  உங்களுடைய வலைத்தளம் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. ஆக்கபூர்வமான ஆக்கங்களை உங்களது வலைத்தளத்தில் நான் வாசித்திருக்கிறேன். உங்கள் பணியைத் தொடருங்கள்.

யாழ் முஸ்லிம் வலைத்தளம் என்று பெயரை வைத்து யாழ் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடாமல் பொதுவான ஆக்கங்கள், செய்திகளை நீங்கள் பிரசுரிப்பதால் உங்களுடைய வலைத்தளம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் பலராலும் வாசிக்கப்படும் ஒரு வலைத்தளமாக மாறியுள்ளது. அதன் மூலம் யாழ் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் (உ.ம். மீள் குடியேற்றம்) போன்ற பிரச்சினைகளை உங்களால் மக்கள் மயப்படுத்த முடிந்திருக்கிறது. 

முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை மாற்று மத தமிழ் சகோதரர்களும் அறிந்து கொள்வதற்கான சூழலை இதன் மூலம் உருவாக்கியிருக்கிறீர்கள். அதுவே உங்கள் வலைத்தளத்தின் வெற்றிக்கான போதுமான சான்றென நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தை blogspot இலிருந்து .com / .lk க்கு மாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறேன். ஏனெனில், சொந்த வலைத்தளம் நடாத்துவதற்குத் தேவையான போதுமான வாசகர்களை உங்களுடைய வலைத்தளம் கொண்டுள்ளது. நிர்வாகச்செலவுகளை நிவர்த்தி செய்ய விளம்பரங்களைப் பிரசுரிக்கலாம்.

உங்களது முயற்சிகள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.

ஹாலிக் அல் அர்ஷத் (நளீமி

No comments

Powered by Blogger.